திராவிடத் தெய்வம் கண்ணகி
Dhiraavida Dheivam Kannagi
₹950
எழுத்தாளர் :பேரா. காவ்யா சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :926
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஎண்ணற்ற சான்றுகள், முன்னெடுப்புகளுடன் தமிழகத்தில், கேரளத்தில், ஈழத்தில்
கண்ணகி வழிபாடு எனத் தனித்தனித் தலைப்புகளில் நூலில் விரிவாக
ஆராயப்படுகிறது.
கண்ணகியின் காலத்தோடு, அவள் வழிபாட்டிலுள்ள எண்ணற்ற புதிர்களையும் புதிய செய்திகளையும் தரும் நூலாசிரியர், பின்னுள்ள காரண காரியங்களையும் விளக்குகிறார்.
பதைனி என்ற பிராகிருதச் சொல்லால் குறிக்கப்பட்ட சமண, பெளத்தங்களின் வழிபாடே பின்னர் பட்டினி, பத்தினி என்றானதாகவும் கற்பு நெறி சார்ந்தவொன்றல்ல என்றும் விளக்கப்படுகிறது.
சோழ நாட்டில் மதுரைக் காளி, மதுரகாளி என்றெல்லாம் வழிபடப்படும் கண்ணகி, கொங்குப் பகுதியில் வஞ்சியம்மன் தொடங்கி எண்ணற்ற பெயர்களில் தொழப்படுகிறாள்.
கேரளத்தில் வேறுபல பெயர்களுடன் கொடுங்கல்லூர் உள்பட சில இடங்களில் ஒற்றைமுலைச்சி அம்மன் என்ற பெயரில் வழிபடப்படும் கண்ணகி அம்மனைப் பற்றிய ஏராள விவரங்களும் காணக் கிடைக்கின்றன.
இலங்கையில் கண்ணகி வழிபாடு நிலவுவது பற்றி ஏராளமான தரவுகள் தரப்படுகின்றன. சிங்கள மொழியில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட பத்தினி இலக்கியங்கள் இருக்கின்றன என்ற தகவல் வியப்புக்குரியது.