மூல நோய்க்கு முற்றுப்புள்ளி
Moola Noikku Muttrupullli
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜான் பி. நாயகம்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2012
Add to Cartஇந்தியாவில் பலர், மூலநோயால் அவதிப்பட்டு வருவதாக, ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. மூலநோயை பொறுத்தவரை, அலோபதி மருந்துகள், அதிகம் பலன் தருவதில்லை. இயற்கையாக கிடைக்கும், மூலிகை மருந்துகள், மூலத்தை கட்டுப்படுத்துகின்றன. இதில், சேப்பங்கீரை மூலநோயை கட்டுப்படுத்தும், அரிய மூலிகையாக பயன்படுகிறது.
சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவுக்கு பயன்படுகிறது. பொதுவாக நாம், கிழங்கை உபயோகப்படுத்தும் அளவிற்கு கீரையை பயன்படுத்துவதில்லை.
சேப்பங்கிழங்கின் இளந்தண்டுகளும், உணவாக சமைக்கப்படுகிறது. இதில், இளந்தளிரே உண்பதற்கு ஏற்றதாகும். சமைக்கும் போது, சிறிதளவு சோடா உப்பு சேர்க்க வேண்டும். தண்டுகளை சமைக்கும் போது, சிறிது புளி, எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்கவேண்டும். இதனால் காரல் தன்மை நீங்கும்.