book

அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது

Kalaam Maanavakalukku Sonnthu

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

படித்தவர்கள் இரு கண்களை உடையவர்கள், கல்லாதவர்கள் இரு புண்ணுடையவர்கள்” இதைவிட சற்று சூடு சுரணை வருவது போல் வள்ளுவரைத் தவிர யாரால் சொல்ல முடியும். எனவே படி… உலகத்தை உன் அறிவுக் கண்களால் திறந்து பார், அதைவிட்டுப் படிக்காமல் கண் இருந்தும் குருடனாக இருக்காதே என்று அழுத்தமாய் வள்ளுவர் சொல்கிறார்.
தென் கோடியில் ராமநாதபுரத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த அப்துல்கலாம் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக, இந்திய மக்கள் நேசிக்கும் குடியரசு தலைவராக இருப்பதற்குக் காரணம் அவர் கற்ற கல்வியும் அவர் வாழ்ந்து காட்டிய விதமும்தான்.
எனவே இனிவரும் தமிழ் மொழி பேசும் குழந்தை ஒவ்வொன்றும் படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், தானும் வளர்ந்து இந்த நாட்டிற்காகவும் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் செயல்பட்டவர் நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர்.
“பாரத ரத்னா’ அப்துல் கலாம் அவர்கள் கல்வியின் சிறப்பை, அதன் பயன்பாட்டை கலாம் பல மேடைகளில். பல கேள்வி, பதில்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அரிய வாக்கியங்கள்தான் உங்கள் முன் இருக்கும் இவை. உங்களை நேர்படுத்தவும்; நிமிர்ந்து நிற்கவும்; உழைத்து உயரவும்; செம்மைப்படுத்தவும் உதவும்.