book

சூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் 25

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789385814464
Add to Cart

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப ரஜினி, தனக்கென்று தனி பாணியைக் கடைபிடித்து, தனக்கான இடத்தை தமிழ்த் திரையுலகில் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்க வந்து, சுமார் 40 ஆண்டுகள் கடந்தபோதிலும், சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் அவருடனேயே இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கின்றன. அந்தளவிற்கு ரஜினியின் ஸ்டைலின் மூலம் தனித்துவ முத்திரையாகவே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் அவருடனேயே ஒட்டிக்கொண்டன. 'அபூர்வ ராகங்கள்' படத்தில் தொடங்கிய அவரது திரையுலக கலைப்பயணம்’ 2.0', 'காலா' என இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் பயணித்து வந்த பாதையை, 'சூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள்-25' என்ற இந்நூலில், தமிழகத்திலுள்ள பிரபல வார, மாத இதழில் வெளிவந்த பேட்டியை மிக அழகாக தொகுத்து தந்திருக்கிறார் இந்நூலாசிரியர் சபீதா ஜோசப் இந்நூல் ரஜினி ரசிகர்களுக்குத் தலைவாழை விருந்தாகும்.