ஜெயிக்கத் தெரிந்த மனமே
Jeyikkath therintha maname
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.ஏ. விஜய்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788189936945
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Out of StockAdd to Alert List
வாழ்க்கையில் வசந்த காலத்தை மட்டுமே வரவேற்கக் காத்திருக்கும் உள்ளங்களே மிக அதிகம். மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் வெற்றி நம்மை தானாகப் பற்றிக்கொள்ளும். வெற்றியின் வாசல்கள் பல உண்டு, அவ்வாசலுக்குரிய வாட்டமான சாவி எதுவென்று தெரிந்துவிட்டால்போதும், வண்ணமயமான வாழ்க்கை நம் விருப்பப்படி அமைந்துவிடும்.
உழைப்பைக் கொண்ட உயர்வு என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும் நலமும் நாளும் வலம் வர வழிகளைக் காட்டுகிறது இந்த நூல். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், இடர்ப்பாடுகள், வேதனைகள் இருக்கலாம்.
அவற்றையெல்லாம் முறியடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் பெற்று, வாழ்வில் முதன்மை அடையும் ரகசியங்களை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் டி.ஏ.விஜய்.
வளத்தை அள்ளித்தரப் போகும் வாழ்க்கையை புத்தம் புதிதாக அணுக வேண்டிய வழிகள்; குழந்தைகளை வருங்காலத்தில் குரோர்பதிகளாக உருவாக்கத் தேவையான தகவல்கள்; சாதாரண மனிதர்களையும் சாதனை மனிதர்களாக்கி, சரித்திர ஏடுகளை எட்டிப்பிடிக்க வைக்கும் அணுகுமுறைகள்; அசதிவரும் வேளையில்கூட, அசாதாரண செயல்களை அனாயாசமாகச் செய்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.
இதில் சேமிப்பை வலியுறுத்தி, செலவைச் சிக்கனப்படுத்தும் வழிகள் சொல்லப்பட்டாலும், நியாயமான சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து, மனதளவில் பணக்காரத் தோரணையை வளர்த்துக் கொண்டால், உள்ளம் பணத்தை அறுவடை செய்யத் தயாராகிவிடும் என்று உளவியல் நுட்பம் பேசுகிறார் நூலாசிரியர்.
பொருட்களைச் சேர்ப்பது என்ற லட்சிய விதை ஊன்றி, முயற்சி உரமிட்டு, அயர்வை நீக்கி, வியர்வை நீர்விட்டு விளைந்திடும் வெற்றிக்கனிகளைப் பறிக்கக் காத்திருக்கும் வாசகர்களின் வாழ்வில் இந்த நூல் வசந்தத்தை வீசச் செய்யும்.