book

கோபாலன் ஐ.ஸி.எஸ்.

Gopalan I.C.S

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி.வி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :243
பதிப்பு :4
Published on :2010
Out of Stock
Add to Alert List

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.வி.வி அவர்களும் குறிப்பிட தகுந்தவர்கள்.எப்பொழுதுமே அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் புத்தகங்களில் இவ்விருவரின் புத்தகங்களுமே என்னை ஈர்க்கும். என்னையும் அறியாமல் கை நமைச்சல் எடுக்கும் புத்தகத்தை வாங்குவதற்கு. இம்முறை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய ராஜாமணி புத்தகத்தை வாங்கி நமைச்சலை தீர்த்தேன். சிறு வயதில் பெரிய புத்தகங்களை கண்டாலே உதறல் எடுக்கும் வயதில் எனது தந்தை நூலகத்தில் இருந்து தேவன் புத்தகங்களை எடுத்து வருவார். சி.ஐ.டி சந்துரு என்னும் புத்தகமே நான் படித்த முதல் பெரிய புத்தகம். அப்புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரு சிறிய நோட்டும் பேனாவும் குறிப்பு எடுக்கும் அளவிற்கு எனது ஞாபக சக்தி மங்கி இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்