book

கடைசி நாட்களில் புதுமைப்பித்தன்

Kadaisi Natkalil Puthumaipithan

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சிதம்பரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :36
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409511
Out of Stock
Add to Alert List

புதுமைப்பித்தன் மரணம் அடைந்தாலும் அவரது இறுதிச் சடங்கு கண்டு சிதம்பரம் ஆதங்கம் கொண்டுள்ளார்.  "உயிரோடு இருக்கும்போது தலைவணங்கா மன்னனாக விளங்கியவரின் உடல் அங்குக்கூடியிருந்த புரோகிதப் பிண்டங்களின் ஆட்சிக்கெல்லாம் உட்பட்ட கோலத்தைக் கண்டபோது.. குளிப்பாட்டி, கண்களிலே சந்தனம் அப்பி - திறக்காத வாயைத் திறந்து மஞ்சள் அரிசியைத் திணித்து - என்னவெல்லாமோ செய்தார்கள்" என்று மனம் புழுங்கி எழுதியுள்ளார்.

கட்டுரையின் வரிகள் படிப்பவர் கண்களில்நீர் தேங்கச் செய்கின்றன.  புதுமைப்பித்தன் என்ற கலைஞன் கடைசி நாட்களில் ஒவ்வொருவர் முகத்திலும் இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டிவிட்டு மண்ணைவிட்டு மறைந்துவிட்டார்.  நூறாண்டுகளை எட்டிவிட்ட புதுமைப்பித்தன் புகழ் நிலைக்கச் செய்யும் வாசகர்கள் வ்வேற்கத் தக்க அளவில் இந்நூல் அமைந்துள்ளது.