
அவன் விதி
Avan Veethi
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீனவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411200
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of StockAdd to Alert List
அவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒருவேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யா பயல். சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்துச் சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்துபோலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன். இல்லை. போரில் தலை நரைத்துப் போன ஓந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல. விழித்திருக்கும் காலத்திலும்தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்துபோன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண் மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது. அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.
