book

மனம்விட்டு பேசாதீங்க

Manamvittu Pesatheenga

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184765953
Add to Cart

மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பது நம்பிக்கை. ஆனால், மனம்விட்டுப் பேசினால் அவ்வளவும் அதோகதிதான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். எதையும் பேசாதீர்கள் என்கிறது இந்த புத்தகம். ஏன் பேசக் கூடாது? பேசுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ஆம்... குற்றம்தான் என்கிறார் நூலாசிரியர். எப்படி? ‘ஒரு விவாதத்தில் நீ வெற்றி பெறலாம். ஆனால் ஒரு நண்பனை இழந்துவிடுவாய்’ என்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாதத் திறமையால் எதிராளியின் வாயை அடைத்து விடுகிறீர்கள். அப்போது அவர் மனதில் என்ன தோன்றும்? “இப்போதைக்கு நீ ஜெயித்துவிட்டாய். ஆனால் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது உன்னை நான் மட்டம் தட்டுவேன்” என்று கருவக்கூடும். அதுவும் சிலர் எதிரில் நீங்கள் விவாதத்தில் ஜெயித்திருந்தால் எதிராளியின் இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படி ஓர் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றாவிட்டால்கூட தான் தோற்றுவிட்டோமே என்று அவர் மனம் புண்படக்கூடும். உங்களுடன் கொண்ட நட்பை அவர் குறைத்துக்கொள்வார். ஆக, உங்கள் வெற்றி என்பது தற்காலிகமானதுதான். முக்கியமான வேறு ஒன்றை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதனால் தான் மனம்விட்டுப் பேசக் கூடாது என்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகத்தைப் படியுங்கள்... சொல்லாத சொல்தான் வெல்லும் சொல் என்பதை நீங்கள் சொல்வீர்கள்!