book

நானே நான்

Naane Naan

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாவர் சீதாராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

ஏழை படும் பாடு” என்ற படத்தில் ஜாவர்ட் என்ற மிகவும் கண்டிப்பான காவல் ஆய்வாளர் வேடத்தில் நடித்தனால் இவருடைய என்.சீதாராமன் என்ற பெயருடன் ஜாவர் என்ற பெயர் இணைந்துகொண்டது. புராண, சரித்திரக் கதைகளிலிருந்து தமிழ் சினிமா சமூக, குடும்பக் கதைகளுக்கு மாறிய காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்து, கதை, நடிப்பு என இரு தளங்களிலும் அறிவாற்றலுடன் செயல்பட்டுப் புகழ் பெற்றவர்களுள் ஜாவர் சீதாராமனும் ஒருவர். சொந்த ஊர் திருச்சி; இயற்பெயர் சீதாராமன். தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். தந்தையாரின் விருப்பப்படி சீதாராமன் எம்.ஏ., பி.எல்., படித்தார். ஆனால், வழக்குரைஞர் ஆகாமல் கலைஞனாகத் தடம்பதிக்க திரையுலகில் அடியெடுத்து வைத்தார். “மிஸ் மாலினி’ என்னும் படத்தில் ஒரு வேடமேற்று முதன் முறையாக அறிமுகமானார்.  விக்டர் ஹீயூகோவின் “லா மிஸரபில்லா’ என்னும் பிரெஞ்சு நாவலை, “ஏழைபடும் பாடு’ என்னும் தலைப்பில் முதன் முதலாக கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்தார். அந்நாவலைப் படமாக்கத் திட்டமிட்டபோது, “ஒளிப்பதிவு தந்தை’ என்றும், “உயர்ந்த இயக்குநர்’ என்றும் அழைக்கப்பட்ட கே.ராம்நாத், நாவலில் வருகின்ற முக்கிய பாத்திரமான “ஜாவர்’ என்கிற முரட்டுப் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சீதாராமனையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். படம் பெரும் வெற்றியடைந்தது. அன்றிலிருந்து சீதாராமன், “ஜாவர்’ சீதாராமன் என்று பிரபலமானார்.