
மின்னல் மழை மோகினி
Minnal Mazhai Mohini
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாவர் சீதாராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :468
பதிப்பு :6
Published on :2013
Out of StockAdd to Alert List
மழை மோகினி! நள்ளிரவில் ரயிலில் வந்து இறங்கிய சத்யா, மழையில் ஒரு
மோகினிப் பேயை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். ஆந்திர மாநிலத்தில்
ஒரு மலை கிராமத்தில், பழைய அரண்மனை ஒன்றில், அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட
தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக, தமிழ் நாட்டில் இருந்து
வந்திருக்கிறான். அந்த அரண்மனையில் மோகினிப் பேய் இருப்பதாகப் பலர்
எச்சரித்தும், அதனை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த அரண்மனையிலேயே
தங்குகிறான். அங்கு இவனுக்கு முன் இதே வேலைக்கு வந்த கணேசன் என்பவன்
காணாமலே போய் விடுகிறான். நள்ளிரவில் மோகினிப் பேய் வந்து சத்யாவை
அச்சுறுத்துகிறது. முடிவு என்ன ஆகும்? நெஞ்சைப் பிடித்துக் கொண்டு
திகிலுடன் படிக்கும்படியான நாவல், முடிக்கும்வரை கீழே வைக்க மனமிருக்காது.
