book

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

Pagutharivin Sigaram Periyaar E.Ve.Ra

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ்.கே.
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177353969
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், நாட்டுப் பற்றாளர், பகுத்தறிவின் சிகரம்
Out of Stock
Add to Alert List

பெரியார் பற்றி.....

நீலவானில் ஒளிர்ந்ததோர் எல்லையற்ற ஒளிக்கோளம், நிலத்தை நோக்கியது.  சாதி மற்றும் சமயப் பகட்டை கொண்டதோர் உலகைக் கண்டது.


பிராமணப் புரோகிதர்களையும் பிசாசுகளையும் பறந்தோடச் செய்த்து அதன் அச்சுறுத்தும் தோற்றம்.

இனி அவர்களில் யாரும் மூடக் கொள்கைகளைக் கடவுளின் சித்தம் எனக்கூற முடியாது.

அந்த ஏழை ஹரிஜன், வைக்கத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டவன், தன் விதியைச் சபித்துக் கொண்டான்;  கடவுளால் விதிக்கப்பட்டது அது எனக் கருதினான்.  ஓர் இளைய பெருந்தகையாளர் அங்கே சென்று சொன்னார்: "வாருங்கள் நாம் இந்தத் தெருக்களில் நடப்போம், இருள் விலகும் வரை."

அவர் ஒரு நாட்டுப் பற்றாளர்;  இந்தப் பெருமைமிக்க மண்ணை நேசித்தார்.

அவர் மனிதனை நேசித்தார்;  மூடநம்பிக்கைகளையும் சாதியையும் அவர் வேறுத்தார்.

காலம் என்ற மணற்பரப்பில் அவர் தன் சிறப்புமிக்க காலடித் தடங்களை விட்டுச் சென்றுள்ளார்.

ஐயத்துக்கு இடமின்றி அவை எந்நாளும் நிலைத்திருக்கும்!

ஓர் உயர்ந்த பெருந்தகையாளனான மனிதர் அறிவாற்றலில் தலைசிறந்தவர், நல்லவர்.

கடவுள் இல்லை என்ற உண்மையை அவர் பேசினார்.

அவர்கள் போற்றிய, ஆனால் மோசடியான, ஒன்றுக்காகப் பலரும் கோபமுற்றனர்.  கடவுள் தான் பொதுவான புதைகுழி என்பதை மிகத் தெளிவாக அவர் கண்டார், கிறிஸ்துமஸ் நாளில் அவர் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார். அந்த மாமனிதை மறந்துவிடாதீர்கள்.
- ஏ.எஸ்.கே.

தமிழில் : எம். பாண்டியராஜன்