book

அற்புத விடுகதைகள் 1001

Arputha Vidukathaigal 1001

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :185
பதிப்பு :3
Published on :2009
ISBN :9789383670475
குறிச்சொற்கள் :பொன்மொழிகள், பொதுஅறிவு, வினா-விடை
Add to Cart

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர் . நம் பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம்  பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர்.

விடுகதைகள்  கூறும்  வழக்கம் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு  முன்னரே பழமொழிகளும்  விடுகதைகளும்  வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும்  சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும்  பயிற்சியளிக்கன்றன. சிறுவர்கள், விடுகதை கேட்டு விடையிறுப்பதில் ஆர்வம் மிகுவதால் தாமே விடுகதைகள்  புனையும் ஆற்றலும் பெறுகின்றனர்.

சமூகத்திற்கு  எஞ்ஞான்றும்  பயன்படக்கூடிய  கருத்துக்களைத் தொகுத்து நூலாகப்படைக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிக்க தோழர் ச. குமார், சான்றோர் பொன்மொழிகள் 'என்ற தொகுப்பு நூலை வெளியிட்டதை அடுத்து, தற்போது அற்புத விடுகதைகள் -1001 என்ற அரிய நூலைப்படைத்துள்ளார்.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.