book

மாணவர்கள் போற்றும் கலைஞர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சை.அ. சையத் அஜ்மல் தஹசின்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197183720
Out of Stock
Add to Alert List

தமிழ்த் தாயின் தவப்புதல்வன், தமிழ் இனம் காத்த தலைவன், நவீன தமிழ்நாட்டை செதுக்கிய நவயுக சிற்பி, மாநில உரிமைகளை மீட்டெடுத்த மறத்தமிழன், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் புகழப்படும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலைஞரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் எழுத்தாற்றல் நிறைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வார்த்தைகளால் கலைஞரின் மொழியாற்றல், ஆட்சித்திறம், சாதனைகள், சிறப்புகள் ஆகியவற்றை போற்றும் வகையில் மடைதிறந்த வெள்ளம் போல பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளாகப் படைத்துள்ளனர். 

அவற்றையெல்லாம் ஆசிரியரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமாகிய கவிஞர் முத்தமிழன் சை.அ.சையத் அஜ்மல் தஹசீன் அவர்கள் மணிமணியாய் கோர்த்து அழகிய மாலையாக, கலைஞரின் புகழ்பாடும் வகையில் '' மாணவர்கள் போற்றும் கலைஞர்'' என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.

உலகம் போற்றும் உன்னத தலைவராம் கலைஞரின் மாண்புகளையும் அரும் பெரும் சிறப்புகளையும் இந்த தலைமுறை மாணவர்களிடையே நிலை நிறுத்துவதே இந்த நூலின் சிறப்பு.