book

ஆனை மலை

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரசாந்த் வே
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576937
Add to Cart

வனத்துக்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி அவன் மண்ணில் வாழ முடியாது. பழங்குடியின் மண்ணிலிருந்து அவனை வெளியேற்ற ஒரு பெரும் அதிகாரம் கட்டமைக்கப்படுகின்றது. புலிகள் அதன் சரணாலயம் மற்றும் இயற்கை , சுற்றுச்சூழல் அதன் ஆர்வலர்கள் மற்றும் அது சார்ந்த நிதியம் என எல்லாமுமே அந்தப் பழங்குடிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடியதாக மாறிய நிலையில், அந்த மக்கள் யாரிடத்தில் தங்கள் நியாயத்தை, நீதியைக் கோர முடியும்? ஆனால் வனம் அவர்களைக் காக்கும் தாயாக மாறி தன் குழந்தைகளின் நியாயத்தைப் பேசுவாள் எனப் பழங்குடிகள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை மட்டுமே அவர்களைத் தொடர்ந்து உள்ளேயும், வெளியேயும் வனத்தை இறுகப்பற்றிப் போராட வைக்கின்றது. ஆனைமலை என்பது வெறும் மரங்களும், விலங்குகளும் மட்டும் கொண்ட நிலமகள் அல்ல. அவளின் மக்கள் அவளிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள். அவளின் அறுபடாத தொப்புள் கொடி இன்னமும் அவர்களுடன் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி வருகின்றது. இந்த உறவால் மட்டுமே வனம் உயிருடன் உள்ளது. இதனைத் தனது படைப்பில் தொடர்ந்து பிரசாந்த் வே இலக்கியமாகக் காட்சிப் படுத்துகின்றார். இந்தக் காட்சிப்படுத்தல் பழங்குடிகளுக்கானது மட்டுமல்ல, ஒருவகையில் பொதுச் சமூகம் வனத்தின் குரலை தங்கள் சுயநலத்தின் பொருட்டேனும் கேட்க வேண்டும் என்ற கரிசனத்துடன் எனக் கருதுகின்றேன்.