
என்னைத் தேடு - ஜன்னல் நிலா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
என்னைத் தேடு
வித்தியாச பின்னணியில் ஈகிள்ஸ் ஐ துப்பறியும் பரபர கீரைம் த்ரில்லர்
பிரவுன் நிற நாய் வாட்டர் கூலரின் பின்னே முகர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. நாய் அந்தரத்திற்குத் தூக்கியடிக் கப்பட்டு வெடித்தது. வாட்டர் கூலர் பல கூறுகளாக சிதறியது.
போலீஸின் கவனம் அந்தப்புறம் திரும்புமுன் அடுத்த வெடிகுண்டு ஷோகேஸின் மே மேல்தட்டில் வெடித்து, துணிகள் குபீரென்று பற்றிக்கொண்டன. டி.எஸ்.பி. .பி. சக்ரவர்த்தி கம்ப்யூட்டர் வேகத்தில் யோசித்தார். அடுத்து எங்கே வெடிக்கும் என்று தெரியாத நிலையில் சும்மா பராக்கு பார்த்துக் கொண்டு நிற்பதில் அர்த்தமில்லை என்று தோன்றி யது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித பாதுகாப்புமின்றி பாண்டிச்சேரி போலீஸை ஜவுளிக்கடையில் பலி கொடுப்பதில் அர்த்தமில்லை.
ஜன்னல் நிலா
சம்பவங்கள் நிறைந்த அழுத்தமான காதல் கதை
"ப்ளெயினா சொல்லட்டுமா சத்யா? உங்க மேல இருந்த நம்பிக்கையெல்லாம் போயிடிச்சு.. ஆதரவா இருந்து காப்பாத்துவீங்கன்னு நினைச்சிருந்த நேரம் உணர்ச்சிவசப்பட்டு அப்பாவோட சொத்தை எரிச்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டீங்க.. நாளைக்கு வேற ஒருத்தனை வெட்டிட்டு மறுபடியும் ஜெயி லுக்குப் போயிட்டீங்கன்னா, நானும், என் குழந்தை யும் நடுத் தெருவுல நிர்க்கதியா நிக்கணும்..'
"நித்யா!" சத்யவாசனின் குரலில் அதிர்ச்சி இருந்தது.
"சத்யா.. உணர்ச்சி வேகத்துல என்ன வேணா செய்வீங்கன்னு நெஞ்சுல ஒரு பயம் வந்திருச்சி.. இப்ப நான் உங்க கூட புறப்பட்டு வந்துட்டா, ஒரு அவசரம், ஆபத்துன்னா என்னைத் திரும்ப சேர்த்துக்கக் கூட மாட்டாங்க, எங்கம்மா.."
