கறுப்பு அமெரிக்கா
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789386737977
Out of StockAdd to Alert List
அமெரிக்கா மாபெரும் ஜனநாயக நாடுதான். செல்வம் கொழிக்கும் டாலர் தேசம்தான். உலகளவில் செல்வாக்கைச் செலுத்திவரும் மாபெரும் சக்திதான். ஆனால் அதே அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தலைமுறை, தலைமுறையாக ஜனநாயகமின்றி, செல்வமின்றி, செல்வாக்கின்றிக் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கறுப்பின மக்கள் எப்போது, எங்கிருந்து, எதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களை வெள்ளை அமெரிக்கா எப்படி நடத்தியது? எப்படி அவர்களைச் சமுகத்திலிருந்து விலக்கி வைத்து, ஒடுக்கியது? குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இன்றி கறுப்பின மக்களின் வாழ்வும் கனவுகளும் நொறுக்கப்பட்டது ஏன்?
வானதியின் இந்நூல் கறுப்பின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளை மட்டும் பட்டியலிடாமல் அந்த அநீதிகளை எவ்வாறு அவர்கள் ஒன்று திரண்டு எதிர்கொண்டனர் என்பதையும் தங்கள் உரிமைகளை எவ்வாறு உத்வேத்தோடு போராடி மீட்டெடுத்தனர் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
ஆபிரகாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்றோரின் போராட்டங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா என்பது கறுப்பினத்தவர்களின் தேசமும்தான். அமெரிக்க வரலாறு என்பது அவர்களுடைய வரலாறும்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவும் நூல்