book

உன் தோலுக்கு அடியில் நீ

₹430+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமயந்தி பிஸ்வாஸ், க. பூரணச்சந்திரன்
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788177203455
Out of Stock
Add to Alert List

விறுவிறுப்பூட்டும் இந்த மர்ம நாவலைப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மனம் வராது. பொய். பேராசை. குடும்பம் இது ஓர் இருண்ட, புகைமூட்டமான டெல்லி குளிர்காலம். இந்திய-அமெரிக்க ஒற்றைத் தாயான அஞ்சலி மோர்கன் தனது மனவளர்ச்சி குறைந்த பதின்மவயது மகனைப் பராமரிப்பதுடன், ஒரு மனநல மருத்துவராகத் தன்னுடைய பணியையும் மேற்கொள்கிறார். அவர் இலட்சிய ஆர்வமிக்கக் காவல்துறை ஆணையாளர் யதீன் பட்டுடன் ஒரு நீண்டகால உறவிலும் இருக்கிறார் - அது இருவரின் வாழ்க்கையையும் அழிக்கக்கூடிய தவிர்க்க முடியாத ஓர் ஈர்ப்பு. இதேவேளை, யதீனின் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்துகொண்டிருக்கிறது: அழகும் கவர்ச்சியும் மிக்க அவருடைய மகன் வெளிப்பார்வைக்கு அவனுடைய தோற்றத்தைப் போன்றிருக்கவில்லை. யதீனின் மனைவியோ தன் கணவன், மகன் இருவர் மீதும் எவ்வித அக்கறையும் இல்லாமல் இக்கட்டில் இருக்கிறாள். ஆனால் யதீன் மிகவும் ஆழமான புரிந்துணர்வுள்ள தம் சகோதரி உள்பட யாருடைய பேச்சையும் கேட்க மறுக்கிறார். நகரம் முழுவதும் குற்றச்செயல்கள் குதியாட்டம் போடுகின்றன: சேரிப் பெண்கள் குப்பைப் பைகளில் திணிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறார்கள், அவர்களுடைய முகங்களும் உடல்களும் அமிலத்தால் சிதைக்கப்பட்டிருக்கின்றன. குற்ற விசாரணை யதீனின் பெரும் சாதனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஆனால், நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி விரியும் போதில், அஞ்சலி திகிலூட்டும் வகையில் எல்லாவற்றின் மையத்திலும் இருப்பது தெரிகிறது. வறுமை, பெண்வெறுப்பு, அரசியல் ஊழல் நிறைந்த ஒரு மோசமான உலகில், யதீன் சில கடுமையான தேர்வுகளைச் செய்ய வேண்டும். ஆனால் அவர் கண்டுபிடித்ததெல்லாம் பனிப்பாறையின் நுனியை மட்டுமே. காலம் செல்லும் முன்பாக, அவர் அஞ்சலியுடன் பழைய காயங்களைச் சந்தித்தாக வேண்டும்; நீண்டகாலமாக மறைந்துறையும் இரகசியங்களைத் தோண்டியாக வேண்டும். விறுவிறுப்பூட்டும் இந்த மர்ம நாவலைப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மனம் வராது.