book

பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து)

₹600
எழுத்தாளர் :T.V. சதாசிவ பண்டாரத்தார்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :696
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195976423
Out of Stock
Add to Alert List

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்கால முதற் பதின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சோழ இராச்சியத்தில் அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தேன். முதற்பகுதி கி.பி.849 முதல் 1070 வரையில் ஆட்சி புரிந்தோரின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது. இரண்டாம் பகுதி கி.பி.1070 முதல் 1279 வரையில் அரசாண்டவர்களின் வரலாற்றைத் தன்பாற் கொண்டது. இவ்விரு காலப்பகுதியிலும் ஆட்சி புரிந்தவர்கள், கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்கட்குச் சற்றேறக்குறைய அறுநூறு ஆண்டிற்குப் பிற்பட்டவர்களாய் அவர்கள் வழியில் தோன்றியவர்களாதலின் இவ்வரலாற்று நூலுக்குப் `பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்று பெயரிடப்பட்டது. இச்சரித நூல் எழுதுவதற்கு யான் ஆதரமாகக் கொண்ட நூல்கள் பலவாகும். அவற்றையெல்லாம் ஆங்காங்கே குறிப்பில் எடுத்துக் காட்டியுள்ளேன். வரலாற்று ஆராய்ச்சி செய்வோர்க்குப் பயன்படுமாறு இச்சரித நூலின் இறுதியில் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும், பழைய நூல்களிலும் உரைகளிலும் கண்ட அவர்களைப் பற்றிய பாடல்களும், சோழ மன்னர்களின் மரபு விளக்கமும் சேர்க்கைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. -T.V.சதாசிவ பண்டாரத்தார்.