கள்ளம்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை ப்ரகாஷ்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
‘கள்ளம்’ உண்மையில் இது ஓர் அபாயகரமான நாவல். ப்ரகாஷ் சிறு
பிள்ளைகளைப் போல அபாயங்களைச் சந்திப்பதில் எப்போதும் ஆவல் காட்டுவது
வழக்கம். அதனால் தனக்கு கஷ்டம், நஷ்டம் என்று தெரிந்தும் துணிந்து
அபாயங்களுடன் விளையாட அவரால்தான் முடியும்.
இக்கதையை நான் படித்தபோது, “பெண்கள் ஏனிப்படி லகுவில் சோரம் போகிறார்கள்?” என்ற கேள்வியை ப்ரகாஷிடம் கேட்டேன். “நீ வளர்ந்த சூழ்நிலையில் இவ்வாறு கேட்கிறாய். ஆனால் சமுதாயம் அப்படி இல்லை. அங்கே இவை நடந்தேறிக் கொண்டுதான் உள்ளன” என்று பதிலளித்தார். அப்போது என்னுடன் பணியாற்றிய எனது தோழி செல்வி, வசந்தாவிடம் நாவலைக் கொடுத்து, “படித்து விட்டு உனக்குத் தோன்றுவதைச் சொல்” என்றார். அவர் தஞ்சாவூர் பூக்காரத் தெரு பகுதியில் வசிப்பவர். படித்து விட்டு “எப்படி பாவா கண்ணால் பார்த்தது போல எழுதி இருக்கிறீர்கள்?” என்றார். ப்ரகாஷ் என்னைப் பார்த்தார். இப்படி இல்லை என்று மறுப்பதற்கு வகையில்லாமல் அவரது படைப்பும் கருத்தும் வலுப்பெறும் விதமாகத்தான் நடப்பும் செய்திகளும் கூறுகின்றன