book

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

₹480+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் சிவ. கன்னியப்பன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :488
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

1953ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி முதல் கூட்டத்தில் நாமக்கல் கவிஞரை நேருவுக்கு அறிமுகப்படுத்தியபோது டாக்டர் எஸ். இராதாகிருட்டிணன் கூறியதாவது:"நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்; தலைசிறந்த தேசபக்தர்; தேசத்துக்காகத் தியாகம் பல செய்தவர்; சிறைவாசம் புரிந்தவர்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; நண்பர்களின் அன்பைக் கவர்ந்தவர்; கள்ளங்கபடம் அற்ற உள்ளத்தினர்; புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர்; ஆடம்பரத்தை அடியோடு வெறுத்தவர்; “ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே! என்று பாடித் தமிழ் நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்” எனக் கூறினார். மனிதப் பிறவி எடுத்ததன் பயனைக் குறைவறப் பெற்றவர் நாமக்கல் கவிஞராவார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரசு புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் மக்களால் பாராட்டப்பட்டவர்; கள்ளங்கபடமற்றவர்; சிறந்த சிந்தனையாளர்; அன்னார் பாடல்களைப் படித்து இன்புறுவோமாக.