அழகர் கோயில்
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ. பரமசிவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :374
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789355232588
Out of StockAdd to Alert List
மதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இப்பகுதி சமணம், பௌத்த மதங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. முருகக் கடவுளோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகிறது.
இம்மலை யாருக்கு உரிமையுடையது, கோயிலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் உள்ள உறவு, அவ்வுறவுகளால் எழுந்த விழாக்கள், சடங்குகளுக்கான பின்புலங்கள், வைதீக அழகர் கள்ளழகராக அவதாரம் கொண்டதன் காரணம், நாட்டார் இலக்கியமான வர்ணிப்புப் பாடல்களின் அரசியல், அழகர் கோயில் வெளியில் சாமியாடுதல், கிடா வெட்டுதல் போன்ற நாட்டார் கூறுகளை ஏற்றுக்கொண்ட சனநாயகப் பண்பு எனப் பல்வேறு கூறுகளை விரிவாகக் கூறும் இந்நூல் துப்பறியும் புதினம் போலச் சுவையாக எழுதப்பட்டுள்ளது.
தொ. பரமசிவன், நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதிய இந்த நூலின் முந்தைய பதிப்புகளில் இருந்த எழுத்துப் பிழைகளை நீக்கியும் கூட்டுச் சொற்களை எளிமை கருதிச் சீர் பிரித்தும் இன்றைய தலைமுறையினருக்கு உதவும் வகையில் தேவையான அடிக்குறிப்புகளையும் கூடுதல் தகவல்களையும் இணைத்தும் இந்தப் பதிப்பு உருவாகியுள்ளது. தொ.ப.வின் ஆய்வுத் தோழர் வெ.வேதாசலம் அவர்கள் தந்துதவிய அழகர் கோயில் தொடர்பான படங்களும் இப்பதிப்பில் உள்ளன.