book

மீதிச் சரித்திரம்

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாதல் சர்க்கார்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788185602561
Add to Cart

தெருக்கூத்துவகையிலான நாடகங்களை ‘முதல் தியேட்டர்’ என்றும் மேற்கிலிருந்துநமக்கு வந்த மேடை நாடகங்களை ‘இரண்டாவது தியேட்டர்’ என்றும்விளக்கும் பாதல் சர்க்கார், 70களின் துவக்கத்தில் இந்த ‘இரண்டாவது தியேட்டரி’லிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டார். ‘சதாப்தி’ என்ற நாடகக் குழுவை நிறுவி ஒலி, ஒளி, ஒப்பனை, மரபு-வழி மேடை ஆகியவற்றை
நிராகரித்து முற்ற மேடை அமைப்புக் கொண்ட ‘மூன்றாவது தியேட்டர் நாடகங்களை நீண்ட கூடங்களிலும்
திறந்தவெளிகளிலும் நடத்தி வந்தார்.

மூன்றாவது,தியேட்டர் என்பது வெறும் உருவ ரீதியான ஒரு பரிசோதனை மட்டுமல்ல. அது நாடகம் குறித்த
ஒரு புதிய பிரக்ஞையின் வெளிப்பாடும்கூட. நடிகர்கள் பார்வையாளர்களுக் கிடையேயான உறவையும்
அனுபவ பரிவர்த்தனையையும் குறித்துத் தனித்துவமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட பாதல்
சர்க்காரின் இயக்கம் சமகால இந்திய நாடகத் துறைக்குப் புதிய பரிமாணங்களையும் வளங்களையும்
சேர்த்துள்ளது.