
ஆறாவது பெண்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குறிஞ்சிவேலன், சேது
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789382810674
Out of StockAdd to Alert List
இங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் .
தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின்
பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை
கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் .
ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து
சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும்
தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும்
தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான்
இருக்கிறேன் .
இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் .
உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து
கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும்
வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு
தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின்
பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின்
கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘
