book

வந்தவாசிப் போர் 250

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. இராஜேந்திரன் இ.ஆ.ப, அ. வெண்ணிலா
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789382810469
Out of Stock
Add to Alert List

வந்தவாசிப் போர் நடந்து 250 வருடங்கள் ஆகின்றன என்றும், அச்சமயத்தில் இம்மலையும் ஒரு முக்கிய களமாக இருந்திருக்கலாம் என்றும் அறிந்தோம். மலையிலிருந்து பார்த்தபோது வந்தவாசியின் இடிந்த கோட்டை தென்பட்டது. பின்பு மலையைவிட்டு இறங்கியவுடன் தொல்பொருள் ஆய்வுத் துறையின் காப்பாட்சியர் கலைவாணனிடம் தொடர்பு கொண்டேன். எனது உதவியாளர்கள் ரமேசும் பன்னீர்செல்வமும் கணினி வலையில், 1760 ஆம் ஆண்டு நடந்த வந்தவாசிப் போர் என்று தேட ஆரம்பித்தனர்.
மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வருவதுண்டு. நேற்றைய பெரிய குடும்பம் இன்றில்லை. இன்றைக்கு ஊரில் உள்ள பெரிய குடும்பம் நாளை இன்றை விட சிறப்பாகலாம், வளம் குறையலாம் அல்லது இதே நிலையில் தொடரலாம். இது போலத்தான் ஊர்களின் தலையெழுத்தும். 1759 - 1760 ஆம் ஆண்டுகளில் வந்தவாசி என்ற பெயர் பிரிட்டீஷ், பிரெஞ்சு ராணுவத் தளபதிகளாலும், கவர்னர்களாலும், இவர்களை பாரிசிலிருந்தும், லண்டனிலிருந்தும் இயக்கும் கம்பெனிகளின் இயக்குனர்களாலும் மறக்க முடியா எண்ணத்தில் இடம் பெற்ற ஊர். காரணம் 3 ஆண்டுகளுக்கு முன், வங்காளத்தில் பிளாசிப்போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை 23.06.1757-ல் வென்றனர். வந்தவாசிக் கோட்டையைப் பிடித்தால் தான் அவ்வெற்றியை ஊர்ஜிதம் செய்து, அவர்கள் மார்தட்ட முடியும். ராபர்ட் கிளைவ் ‘ஆற்காடு வீரர்' பட்டத்தையும் தக்க வைக்க முடியும்...