
மாப்பசான் சிறுகதைகள்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகரத்தினம் கிருஷ்ணா, கைய் டே மௌபசண்ட்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442503
Out of StockAdd to Alert List
புதுமைப்பித்தனை போலவே 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாப்பசான், கலாப்ரியாவைப் போல ‘அசிங்கங்களுக்கான அழகான’ கதைகள் எழுதியவர். உலகம் போற்றும் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் மிகச் சிறந்த கதைகள் எல்லாம் பெண்களின் கதைகள். பாலியல் தொழிலாளிகள், நடிகைகள், விளிம்பு நிலை மக்கள் குறித்த அவரது கதைகள் வலிமையானவை; பொதுவாக அவரது கதைகளில் அவநம்பிக்கையும் நலிவும் நோய்மையும் படர்ந்திருக்கும். ஆனால் அவரது கதாபாத்திரங்கள் உளவியல் அனுபவங்களின் திரட்சியாக உருவெடுக்கின்றன. துயரமும் இருண்மையும் கொண்ட கதைகளை எழுதிய மாப்பசான் அமைதியையும் தனிமையையும் விரும்பினார். நதியும் கடலும் அவர் நாடியவை. ஆனால் இறுதியில் மனநோயாளியாகி மரணமடைந்தார். ‘இலக்கிய வாழ்வில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல நுழைந்தேன்; ஓர் இடிமுழக்கத்தைப் போல வெளியேறுவேன்’ என்று சொன்ன மாப்பசான் இன்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறார்.
