book

உயிரே உயிரே

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொற்கொடி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

பொறாமையால் தவறு செய்பவர்கள் எக்காலத்திலும் தன்னை மாற்றிக்கொள்வது இல்லை. வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் உருவாகும் பொறாமை தீயை அணைக்க விடாமல் எதிராளியை கவிழ்த்த பிறகே அணைப்பர் .ஆனால் தெரியாத உண்மை அவர்களால் அனைவரையும் ஏமாற்ற முடியாது, அப்படி ஏமாறுபவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்கக் கூடிய தகுதியை இழந்தவர்களே. மற்றவர்களுக்கு அவர்களால் பயன் இல்லை.

ஒரே வருடம் கணவனுடன் வாழ்ந்த துர்கா, மனஸ்தாபங்களால் அவனிடம் இருந்து பிரிந்து தன் மகளுடன் வசிக்கிறாள். தற்போது புற்று நோயின் இறுதி கட்டத்தில் அவதிபடுபவள். இருபத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் கணவன் அனுப்பிய ஆள் என்று குருப்ரீத் வருகிறான்.
அவரிடம் வேலை செய்பவன் என்றும் துர்காவின் கணவன் மனோஜ் தற்போது மிகப்பெரிய செல்வந்தர் என்பதால் தனக்குப் பிறகு வாரிசு வேண்டும் என்பதற்காக வேறு ஒருவளை மணக்க இருப்பதால் விவகாரத்திற்கு அவளின் கையெழுத்திற்காகத் தேடி கண்டுபிடித்ததைச் சொல்கிறான்.

தாங்கள் உலகில் உயிரோடு இல்லை என்று சொல்லி அனுப்பியதை மனோஜ்ஜிடம் அப்படியே சொல்பவன். அவருக்கு மகள் சுஜிதா இருப்பதையும் சொல்கிறான். சில நாட்களுக்குப் பிறகு அவளைத் தேடி வரும் குருப்ரீத்தை துர்காவின் மரணச் செய்தி தான் எதிர்கொள்கிறது.

சுஜிதாவை தன்னுடன் சண்டிகருக்கு அழைத்துச் சென்று அவளின் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான். குருப்ரீத்தின் மாமா தான் மனோஜ். அந்த குடும்பச் சூழலில் ஒட்டமுடியாமல் அவதி படுபகிறாள் அதற்குக் காரணம் அவர்கள் எல்லாரும் தன் தாயை கொடுமைபடுத்தியதை அவரே டைரியில் எழுதியதை படித்ததால். தந்தையை மன்னிக்கவும் தயாரில்லை ஆனால் தன் வாரிசு வந்ததைக் கொண்டாடி தீர்க்கிறார் மனோஜ்.