book

ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் 100

₹1000
எழுத்தாளர் :பேரா.இரா. மோகன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :862
பதிப்பு :1
Add to Cart

47 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் கவிதை உறவு இதழின் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், ‘மனதில் பதிந்தவர்கள்’ எனும் தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் இதுவரை 9 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இதுவரை 241 ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். அக்கட்டுரைகளிலிருந்து 100 ஆளுமைகளைத் தேர்வுசெய்து தொகுத்துள்ளார் இரா.மோகன். நடைச் சித்திரமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், வெறும் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், மனங்கவர்ந்த மனிதர்களின் குண நலன்களையும், அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் படிப்பவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது. சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மனிதர்களைக் கொண்டாடுகிற முன்னெடுப்பு என்று இத்தொகுப்பைச் சொல்லலாம். - மு.முருகேஷ்