
குழந்தைகள் மனநலம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம். திருநாவுக்கரசு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :275
பதிப்பு :4
Out of StockAdd to Alert List
பெரும் பெற்றோர்கள் "உணர்வு" பூர்வமாக குழந்தைகளை வளர்த்தனர். இன்றைய
பெற்றோர்கள் "உணர்ச்சி" பூர்வமாக குழந்தைகளை வளர்க்கின்றனர். என்ன
வித்தியாசம்? 'உணர்வு என்பது குழந்தையின் உடல், மனத்தேவைகள் அனைத்தையும்
உணர்ந்துகொண்டு செயல்படுவது. 'உணர்ச்சி என்பது அந்த நேரத்தில் அந்தக்
குழந்தையின் தேவைகளைப் பூர்த்திசெய்வது! குழந்தைகள் நமக்கு இறைவன் அளித்த
வரம். மிகப்பெரிய பரிசு! குழந்தையின் மனதும், அறிவும், உடல் நலம்போல்
நன்றாக இருக்க வேண்டும், உடல்தேவைகளை தாய் உணர்வுபூர்வமாக அறிந்து
கொள்கிறாள். அதிக அன்பும், அதிக கண்டிப்பும் மனநிலையை ஏதோ 'ஒரு திசையை
நோக்கிச் செலுத்துகிறது. நமது நிறைவேறாத கனவுகளும் குழந்தையின் தலையில்
ஏற்றப்படுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் 100க்கு 100 மதிப்பெண் வாங்க
முடியுமா! குறைவான மதிப்பெண் பெறும் குழந்தை, வேறு ஏதோ ஒன்றில் சிறந்து
விளங்கும். அதையே அக்குழந்தையின் எதிர்கால விதையாக விதையுங்கள்! இன்றைய
குழந்தைகள் மிகச் சிறந்த அறிவுற்றாலைக்கொண்டிருக்கிறார்கள்! அதை எவ்வாறு
உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில்,
சரியான திசையில் கொண்டுசெல்வது என்ற வழிகாட்ட தாக்குத் தகுதிபடைத்த
ஒருவரால் தமிழில் வெளிவரும் முதல் நூல்! கண்ணதாசன் பதிப்பக வெளியீடுகள்
அனைத்தும் பொக்கிஷங்கள்.
