book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 17

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :600
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

பதினேழாவது அத்தியாயம்

சி’ரத்தாத்ரய விபாக யோகம்

முந்தைய அத்தியாய கடைசி சுலோகத்தில் காரியம் அகாரியம் இரண்டையும் அறிவதற்கு சாஸ்திரமே பிரமாணம் என்று சொல்லப்பட்டது.

‘எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பதை எனக்குச் சொல்லித்தர சாஸ்திரம் தேவையில்லை. எனக்கே தெரியும்’. உண்மைதான். நீ மனிதனாக இருப்பதால் உனக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

திருடுவது தப்பு என்பதைத் திருடர்களும் அறிகிறார்கள். ‘தெரியாமல் திருடிவிட்டேன், திருடுவது தப்பு என்பது எனக்குத் தெரியாது’ என்று யாரும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. தப்பில்லை என்றால் யாரும் அறியாமல், பொருளை இரகசியமாக எடுத்தது எதற்காக? தெரிந்தும் ஏன் திருடினான்?

திருடினால் என்ன கிடைக்கும்? அதை வைத்துக் கொண்டு எப்படி இன்புற்றிருக்கலாம் என்பதுதான் அவனுக்குத் தெரிகிறதே தவிர திருடுவதால் அவன் என்ன இழக்கிறான் என்பதை அவன் அறிவதில்லை.

திருடுவதற்கு என்ன தேவை, எந்தளவுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிபவனுக்கு, என்ன இழக்கிறேன் என்பது தெரிவதில்லை. ஆதலால் அதைச் சொல்லித்தர சாஸ்திரம் முன்வருகிறது.
திருடலாம், திருடாமலும் இருக்கலாம், பொய் சொல்லலாம், பொய் சொல்லாமலும் இருக்கலாம், கொல்லலாம், கொல்லாமலும் இருக்கலாம். கொடுக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம்.
செய்யலாம், செய்யாதிருக்கலாம் என்கிற இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை, சுதந்திரம் மனிதனுக்கு இருக்கிறது. மிருகங்களுக்கு இந்தச் செயல்தேர்வுச் சுதந்திரம் இல்லை. மிருகங்கள் போக்தா மட்டுமே, கர்த்தா அல்ல.

மனிதனின் செயல் உரிமையை, ‘ப்ரீவில்’ என்பார்கள். சுயேச்சை! செயல் சுதந்திரம். இதை மனிதன் அறிகிறான். அதே சமயம் ‘கர்ம விதி’ என்று ஒன்றிருப்பதையும் மனிதன் அறியவேண்டும். எதன் அடிப்படையில் எனது செயல் சுதந்திரத்தை நான் பிரயோகிப்பது? எது நல்லது, எது தீயது என்பதை அறிந்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும். எது சரி, எது தப்பு என்பது எல்லாருக்கும் சாமான்ய அறிவில் இருக்கிறது.

எது சரி, எது தப்பு என்பது மனித உலகத்திற்குப் பொதுவிதி. அனைவரும் இயல்பாகவே அறிந்திருப்பது. இதற்குச் சாமான்ய தர்மம் என்று பெயர். சாமான்ய தர்மத்தைப் பள்ளிக்கூடம் சென்று பயிலவேண்டியதில்லை. எது சரி, எது தப்பு என்பது எல்லாராலும் உள்ளுணர்வால் உணரப்படுகிறது.

சாமான்ய விதிகளை எப்படி அறிகிறோமோ அதுபோல் சிறப்பு விதிகளையும் அறிகிறோம். கிளையிலிருந்து பிடியை விட்டால் கீழே விழுந்துவிடுவேன் என்பது குரங்குக் குட்டிக்கும் தெரிகிறது. நியூட்டனின் புவியீர்ப்பு விதியைக் குரங்கு படிக்கத் தேவையில்லை.

இந்த விதிகளை நாம் உருவாக்கவில்லை. ஏற்கெனவே இருக்கின்றன. தீ சுடும், மின்சாரம் ‘ஷாக்’ அடிக்கும் என்பதை நாம் அறிகிறோம். மின்சார விதிகளையும் தீயின் விதிகளையும் மனிதன் உருவாக்கவில்லை, ஆனால் நாம் அவ்விதிகளைக் கண்டுபிடித்துக் கவனமாகப் பயன்படுத்தி வாழ்கிறோம்.

இதுபோலவே தர்ம-அதர்ம விதி என்று ஒரு விதி இருக்கிறது. இதையும் நாம் உருவாக்கவில்லை. பௌதிக, வேதியியர் விதிகளை வகுத்த ஈச்வரனே தர்ம-அதர்ம விதியையும் வகுத்து வைத்திருக்கிறார்.

நியூட்டனின் விதிகளை அறிவதுபோல் இந்தச் சிறப்பு விதியையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி புவி ஈர்ப்புவிசை விதியை அறிந்து கொண்டாயோ, அதுபோல் கர்மவினை விதியையும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். மற்ற விதிகளை அறிகிறாயோ இல்லையோ கர்ம, தர்ம விதியைக் கட்டாயம் அறிந்து கொள்ளவே வேண்டும்.