
புறநானூற்றில் அறம்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபத்து காத்தபிள்ளை
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
தனிமனிதன் தன் கடமைகளைத் தவறாது செய்வது அறமாகும். மனிதனின் நல்லொழுக்கம்
என்பது செயல், எண்ணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பண்டைய தமிழ்ச்
சான்றோர்கள் அறத்தைக் கொள்கையாகவோ, கோட்பாடாகவோ போற்றவில்லை. சமயமாகவும்
கருதவில்லை. அறத்தை வாழ்க்கை நெறியாகவே போற்றினார்கள்; வாழ்ந்தார்கள்.
மனிதன் தன் வாழ்க்கையின் பலவகை அனுபவங்களிருந்து அறிவு பெறுவதே சிறந்த
வாழ்வியலாகும். அவ்வாழ்வியல் தூய்மையானதாக அமைய வேண்டுமெனில் மனிதன்
தனக்கென ஒரு தனி நியதி அறத்தை மேற்கொண்டு வாழவேண்டும். அத்தகைய அறவாழ்வை
எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை, நமது சங்க இலக்கியப் பேழை என்று
அழைக்கப்படும் புறநானூறு செம்மையுறச் செய்துள்ளது. நமது தமிழ்
நாகரிகத்திற்கு ஒரு மூலதாரம்.
