book

தமிழர் சமயம்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. பிள்ளை
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

குமரி நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களை எல்லாம் திராவிடர்கள் என்று கூறுகிறார்கள். தமக்கு முந்தைய ஆய்வாளர்கள் திராவிடர்கள் என்று கூறுவதை முற்றிலும் கா.சு. பிள்ளை அவர்கள் ஒதுக்கிவிடவில்லை. அதேவேளை அவர் கூறுகிறார்: “ஆராய்ச்சிக்கு, திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்று வழங்குதலே பொருத்தமாகும்". "கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்கள் ஆரியர்கள்", இந்தியா முழுவதும் சிந்துச் சமவெளியிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்", "சிவநெறி, திருமால் நெறி இரண்டும் தமிழர் நெறிகள்", இராமன் தமிழனே!” என்று வரலாற்றுத் தரவுகளுடன் அடுக்குகிறார் தமிழ்க் காசு! தமிழர்களுக்குக் குமரிக் கண்ட நாகரிகம் முதலானது. சிந்துவெளி நாகரிகம் வழிநிலையானது என்கிறார். இந்து மதம் ஒரு மதமன்று. இந்து மதம் என்று தமிழிலும் வடமொழியிலும் பண்டைய நூல்களில் இல்லை. இந்தியா அல்லது இந்து மதங்கள் பல. அவற்றுள் சைவம், வைணவம் இரு மதங்கள் என்றால் பொருந்தும்”.