book

திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மணியரசன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789388546294
Out of Stock
Add to Alert List

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் தந்தன் பக்கம் இழுத்துச் சீரழித்துவிட்டன. தமிழர் மறுமலர்ச்சியின் தற்சார்பு முன்னேற்றத்தை - தன்னியக்க முன்னேற்றத்தை வேற்று இனங்களின் விசைகளாக இருந்து இந்திய விடுதலைப் போராட்டமும் - திராவிட இன அரசியலும் பங்கு போட்டு ஈர்த்துக் கொண்டன. அதேவளை இந்திய விடுதலை இயக்கமும் திராவிட இன இயக்கமும் இரண்டு வகையான சமூகத் தேவைகளை முன்னிறுத்தின. வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியை வெளியேற்றி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற வேண்டியது முகாமையானது.