
பெண் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் மா.பா. குருசாமி
பதிப்பகம் :சுவாமிமலை பதிப்பகம்
Publisher :Swamimalai Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :பெண்ணியம், சரித்திரம், பொக்கிஷம், தகவல்கள்
Out of StockAdd to Alert List
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று இன்றையப் பெண்கள் குரல் கொடுக்கின்றனர்.பெண் கல்வி வளர்த்து வருகிறது.அரசுப் பணிகளிலும் பொதுத்துறைப் பணிகளிலும் இன்னும் பல சேவைப் பணிகளிலும் பெண்களின் பங்கு மிகுந்து வருகிறது.எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்கு கூடினாலும் பொருளாதாரத்தில் சமத்துவம் பெற தொழில் ,வாணிபத்துறைகளில் அவர்கள் தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயத்தில் அவர்களது மதிப்பும் நிலையும் மாறும்,உயரும்.உழைப்பும்,தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் எந்தப் போட்டியையும் வென்று, சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முடியும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறுவது என்பது சிறந்ததல்ல.இதில் 50 சதவிகித வெற்றிதான் கிடைக்கும்.ஆண்களும் ,பெண்களும் தொழில் வளர்ச்சியில் ஈடுபட்டால் நூற்றுக்கு நூறு வெற்றி பெற முடியும்.
