book

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்)

Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387854468
Add to Cart

திப்பு சுல்தானுக்கும் அவரது தந்தை ஹைதர் அலிக்கும் எதிராக பேஷ்வாக்கள் போர் புரிந்தனர். இருப்பினும், திப்பு சுல்தானின் பெயரை மும்பையில் உள்ள ஒரு பூங்காவுக்குச் சூட்டியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைக் கண்ட வரலாற்றாசிரியர்களுக்கு வியப்பொன்றும் இல்லை.

18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு போர்க்களத்தில் இறந்த ஒரே இந்திய ஆட்சியாளர் குறித்து பொதுவெளியில் பரவலாக வைக்கப்படும் எதிர்ப்பு வாதங்கள் தான் தற்போது புதிய சர்ச்சையாகக் கிளம்பி இருக்கிறது. இது வரலாற்றில் குறிப்பிடப்படாத ஒன்றாக இருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு எதிரான தற்போதைய எதிர்ப்பு மனநிலயைப் பார்க்கும் போது, அவர் பெயரை ஒரு பூங்காவுக்கு அல்லது விளையாட்டு மைதானத்துக்கு சூட்டுவது ``அரசியல் ரீதியாக தவறானது'' என ஒரு வரலாற்று ஆசிரியராவது நம்புகிறார்.