
மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெர்னர் போன்ஃபெல்ட்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
"திறந்த நெகிழ்வாளர் மார்க்சியம்" தொகுதி மூன்று 'மார்க்சை மீட்டெடுத்தல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுகமாக அமைந்துள்ள முதல் கட்டுரையையும் சேர்ந்து ஒன்பது கட்டுரைகள் இந்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
"மார்க்சை மீட்டெடுத்தல்' என்பது மார்க்சியத்தை மீட்டெடுத்தல் என்ற விளக்கம் பலமுறை நூலினுள் சொல்லப்படுகிறது. மார்க்சியத்தை மீட்டெடுத்தல் எனில் என்ன? இரண்டு விதமாக அதனை நூலாசிரியர் விளக்குகிறார்.
ஒன்று மார்க்சியத்தைச் சுற்றிச் சூழ்ந்துள்ள சமூகவியல் மற்றும் பொருளாதரவியல் மரப்புகளிலிருந்து அதனை மீட்டெடுப்பது ஆகும். அதாவது மார்க்சியத்தை ஆட்கொண்டுள்ள நோக்காட்சித் தத்துவத்திலிருந்து அதனை விடுவிப்பது. இரண்டாவது, மார்ச்சையும் மார்க்சியத்தையும் விடுதலை வழங்கும் தத்துவமாகப் புரிந்து கொள்ளுதல், நேர்க்காட்சித தத்துவங்கள் மார்க்சியத்தின் வீண் சுமைகள் (Dead Weights), வேண்டாத நண்(Faise Friends) என்று விளக்கப்படுகிறது.
மார்க்சியத்தை மீட்டெடுப்பதில் அனுபவம் என்ற கருத்தாக்கம் மையமான இடந்தை வகிக்கிறது. (Experience of resistance to dehumanization) அது நேர்க்காட்சி வாத அனுபவம் அல்ல மாறாக, மானுடப் பண்பை இழக்க மறுக்கும் எதிர்ப்பே அனுபவம் எனப்படுகிறது.
அனுபவம், மீட்டெடுத்தல் ஆகிய கருத்தூக்கங்களின் உதவியோடு மார்க்சின் ஹெகலிய உரிமைகள் பற்றிய தத்துவம். மார்க்சின் டெமாக்ரிட் எப்பிக்யூர் ஒப்பிடு ஆகிய இரண்டு கட்டுரைகள் இத்தொகுதியில் கூடுதலாக வழங்கப்படுகின்றன.
