
விலங்குப் பண்ணை (பீ ஃபார் புக்ஸ்)
₹99+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா.சு. ஜார்ஜ் ஆர்வெல்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
விலங்கு பண்ணை (Animal Farm) என்பது ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ஒரு உருவகப் புதினம் ஆகும். இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகத்து 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன், சுடாலின் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலித்தது. புதினத்தின் கதை, இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய கிராமப்புற பண்ணையான மேனோர் பண்ணையில் அமைந்துள்ளது. பண்ணையை மிகவும் கொடுமையாக நடத்தும் திரு. ஜோன்ஸ் என்ற ஒரு மனிதன் வைத்திருக்கிறான். பண்ணையிலுள்ள அனைத்து விலங்குகளும் மனிதர்களிடமிருந்து விடுபட விரும்புகின்றன. ஒரு நாள், பண்ணையின் முதுமையான படைப்பணித் தலைவர் பன்றி, அனைத்து விலங்குகளையும் கூட்டத்திற்கு அழைக்கிறது. அக் கூட்டத்தில், மனிதர்களை அது ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிடுவதுடன், விலங்குகளுக்குப் புரட்சிகரமான பாடலையும் கற்றுக் கொடுக்கிறது. மூன்று நாட்களுக்குப் பின் படைப்பணித் தலைவர் இறந்த பின் சுனோபால், நெப்போலியன் எனும் இரண்டு இளம் பன்றிகள், தலைமைப் பொறுப்பை ஏற்றன. படைப்பணித் தலைவரின் கனவை, தத்துவத்தை நனவாக்க முடிவு செய்தன. விலங்குகள் வெகுண்டெழுந்து, குடி போதையில் இருக்கும் பொறுப்பற்ற திரு. ஜோன்ஸை பண்ணையை விட்டே விரட்டிய பின், பண்ணைக்கு "அனிமல் ஃபார்ம்" (விலங்குப் பண்ணை) என மறு பெயரிட்டன. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் "மனிதர்கள் எதிரிகள், விலங்குகள் நண்பர்கள்" என்ற தத்துவம் நிறுவப்பட்டது.
