book

திண்ணை இருந்த வீடு

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசி எம். குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

தஞ்சை மண்ணின் திண்ணைகளுக்கு காதுகள் உண்டு! ஆம், எங்கள் கிராமத்து திண்ணைகளில் உட்கார்ந்து கதைத்தக் கதைகள் ஏராளம்! ஏராளம்.. செம்மண்ணால் திண்ணைகள் எழுப்பி அதன்மேல மாட்டுச்சாணம் மொழுகி, அந்தக் குளிர்மையின் உறக்கம் இனி எப்போதும் கிட்டாது! அந்தத் திண்ணையில் மொழுகிய, மாட்டுச்சாணத்தின் வாசம் மடிந்து போனதற்காகத்தான் அண்ணன் சசிக்குமார் இந்நூலில் மண்டியிட்டு கண்ணீர் விட்டிருக்கிறார்! எங்கள் கிராமத்து மனிதர்கள் உரைத்த ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்ட திண்ணைகள் இப்போது இடிந்து விழுந்து இறந்துவிட்டன. அதில் ஒரு திண்ணை உசுருக்கு ஊசலாடிய போது சசிக்குமாரிடம் உரைத்த கதைகள்தாம் இந்நூலில் இடம் பிடித்திருக்கிறது. அதை படம்பிடித்து நம் மனக் கண்ணிற்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் சசிக்குமார்! வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பு அடித்து லட்சுமிச் சீவலை வாய்க் கிணறில் போட்டு, இளஞ்சிவப்பு உமிழ்நீர் ஊற்றெடுக்க, உடனே மைதீன் புகையிலையை இடப்பக்கக் கடவாயில் அடைத்து, குதப்பலோடு குலவும் மொழியின் சுவைதான் அண்ணன் சசிக்குமாரின் எழுத்து!