book

எங்கே உன் கடவுள்?

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரு நிவேதிதா
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388860345
Out of Stock
Add to Alert List

கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்ளக்கில் எழுதியபோது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்கும் நான் அஞ்சவில்லை. எனக்கு 9 வயதுச் சிறுமியிடமும் 90 வயது முதியவரிடமும் சொல்வதற்குச் செய்திகள் இருக்கின்றன. துக்ளக் கட்டுரையைப் படித்துவிட்டு ராமமூர்த்தி என்ற பெரியவர் எனக்கு ஃபோன் செய்தார். பார்த்தால் அவர் எனக்கு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். ஆசானாக இருந்தவர் என்னை ஆசான் என்று சொன்னபோது அழுதுவிட்டேன்.