book

விதையாக இரு

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வழக்கறிஞர் த.இராமலிங்கம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788195164745
Add to Cart

நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏடுகளாக! ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மறை சொன்ன திருக்குறள், வாழ்வுக்குத் தேவையான அத்தனைக் கோட்பாடுகளையும் சொல்லும் ஆத்திசூடி... என நம் தமிழ்ச் சங்கக் கருவூலத்தில் ஏராளமான கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தாலே நம் வாழ்வு மேம்படும், சிந்தனை சீர்படும். நம்மை சோர்வுறச் செய்யாமல் நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்லும் அறக் கருத்துகள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான பொறுமை, நேர்மை, தன்னம்பிக்கை ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது இந்த நூல்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறி, ஒற்றை வரியில் உலகத்தின் ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே உறவாக இணைத்த நம் சங்கத் தமிழ்ச் சிந்தனைகள் நமக்கு என்றென்றும் வழிகாட்டிகளாக இருக்கின்றன. அறக் கருத்துகளை அள்ளித் தரும் இந்த நூல் இளைய சமுதாயத்துக்கு இன்றியமையாதது