book

காட்டுப் பூவின் வாசம்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கழனியூரன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :406
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

பண்டைய திருநெல்வேலி சீமையைச் சேர்ந்த மூத்த இலக்கிய ஆளுமைகளான கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றோரின் அன்பையும், நட்பையும், வழிக்காட்டுதலையும் பெற்ற கழனியூரனின் ஒட்டுமொத்த சிறுகதைத் தொகுப்பு இது. திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான கதைகள் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த எளிய மக்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் பதிவு செய்துள்ளன. நெல்லை வட்டார வழக்குமொழியும், அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் பேசும் வழக்கு மொழியும் சேர்ந்த ஒரு கலவையான வழக்கு மொழி வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைத் தருகிறது. முற்றிலும் புதியதொரு தளத்தில் கழனியூரனின் சிறுகதைகள் பயணிக்கின்றன.