உரையாடும் காந்தி
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :227
பதிப்பு :2
Published on :2019
Add to Cartமுகமது நபியை பற்றியான ஒரு கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருக்கும் இஸ்லாமிய தரப்புகளிடமிருந்து வலுவான எதிர்வினைகள் கிளம்பியது. அதேபோல், காந்தியைப்பற்றி ஓர் அமெரிக்க நூலாசிரியர் எழுதிய கீழ்த்தரமான அவதூறுநூல் பற்றி இணையப்பேச்சில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் இஸ்லாமிய நண்பர் சொன்னார், "இப்போது புரிகிறதா, முகமது நபியைப் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு ஏன் அப்படி எதிர்வினையாற்றினோம் என்று? இந்த அமெரிக்க அற்பர்களுக்கு நாங்கள் சொல்லும் மொழி மட்டும்தான் புரியும். ஜனநாயகம், கருத்துரிமை என்ற பேரில் அவர்கள் செய்வதெல்லாம் மற்ற பண்பாடுகளின் விழுமியங்களை அழிப்பதை மட்டும்தான். இதை கருத்தாடல் என்றே கொள்ளமுடியாது.
காந்தியின் சிந்தனைகளை பலகோணங்களில் பேசுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் இந்த அவதூறுகள் இல்லாமல் செய்கின்றன. அவதூறுகளை விளக்கிக்கொண்டிருப்பதற்கே நேரம் செலவாகிவிடும். இப்படி தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான அவதூறுக்குரல்கள் வழியாக அந்த ஆளுமையையே சொற்களால் ஆன குப்பைக்குள் போட்டு மறைத்துவிடுவார்கள். நபியை அப்படிச்செய்ய நாங்கள் விடமாட்டோம்..."
உண்மைதான் என்று தோன்றுகிறது. காந்திக்கு எதிராக இந்தியாவிலும் வெளியிலும் அவதூறுகளை எழுதிக்குவிப்பவர்கள் அடிப்படைத் தகவல்களைப்பற்றியோ , குறைந்தபட்ச தர்க்கஒழுங்கைப்பற்றியோ அல்லது சாதாரண அறவுணர்ச்சியைப் பற்றியோகூட கவலைப்படுவதில்லை.