கட்சிகளின் கதை
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணகிரி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :260
பதிப்பு :1
Add to Cartஆங்கிலேயர்கள் ஆட்சியில் நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, 1885-ம் ஆண்டு தொடங்கப்பட்டது காங்கிரஸ். தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலை பெறும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ் என்பதன் அர்த்தமே மாநாடு அல்லது கூட்டம் தான்.
அதாவது ஆண்டுக்கு ஒருமுறை கூடி படித்த இந்தியர்களின் நலனை, கோரிக்கையை ஆங்கில அரசுக்கு முன் வைப்பதே இதன் செயல்திட்டமாக இருந்தது. கல்வி கற்ற இந்தியர்களுக்குத் தேவையானவற்றை பெற்றுத் தரும் நோக்கிலேயே, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களால் காங்கிரஸ் கட்டியமைக்கப்பட்டது.
பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் முதல் தலைவராக உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். படித்த மேல்தட்டு இந்தியர்களுக்கு வடிகாலாக இருக்கும் என்பதால் ஆங்கிலேயர்களும் இதனை வரவேற்றனர். ஆனால் நடந்ததோ வேறு. படித்த இளைஞர்களை தேசபக்தியுடன் ஒருங்கிணைக்கும் அமைப்பாக மெல்ல வடிவெடுத்தது.