book

1000 அறிவியல் செய்திகள்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவகோட்டை பஞ்சநதம்
பதிப்பகம் :செந்தமிழ் பதிப்பகம்
Publisher :Sentamil Pathippagam
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :316
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மனிதனின் தேவை பெருகும் போதும், சிந்தனை விரிவடையும் போதும், கண்டுபிடிப்புகளும், தேடுதலும் உருவாகின்றன. தேடுதலின் விளைவாக ஆராய்ச்சி, அறிவியல் வளர்கின்றன. அறிவியல் துறையானது பல கண்டுபிடிப்புகளை தருவதோடு மட்டுமின்றி, பல்வேறு சிக்கல்களுக்கு விடை காண்கிறது. மேலும் பல படைப்புகள், இயற்கை, இயக்கம் இவற்றை பற்றிய புரியாத விபரங்களையும் விளங்க வைக்கிறது. அந்த வகையில் பௌதிக அறிவியல் என்பது அறிவியல் துறையின் ஒரு பகுதி ஆகும். பொருள்களின் இயல்பு, இயக்கம், அமைப்பு, ஒளி, ஒலி, இவற்றைப் பற்றிய விபரங்கள், மின்சாரம், காந்தம், தண்ணீர், போன்றவற்றைப் பற்றியும், காந்தப்புலம், மின்புலம், பாய்மம், மிதத்தல், புவிஈர்ப்பு விசை, பொருண்மை, வேகம், முடுக்கம், அணு, அணு இயக்கம் உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டது இயற்பியல் துறை எனப்படும். இச்சிறு நூலில் பௌதிக துறை பற்றிய செய்திகள், கண்டுபிடிப்புகள், அறிவியல் அறிஞர்கள், செய்திகள், சாதனைகள், முக்கியத்தகவல்கள் உட்பட 1000 தகவல்கள் கேள்வி, பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டு பதிப்புலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் அறிவு பதிப்பகத்திற்கு இச்சிறு நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். மாணாக்கர்க்கும், அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரளவு துணைபுரியும். வாங்கிப் படித்துப் பயன் பெறுக. வாழ்க் வளமுடன்.