book

தமிழ் நாட்டுப்புறவியல்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. தருமராஜ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194932154
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2021
Add to Cart

வாய்மொழி வழக்காறுகள், நாட்டாரிலக்கியம், நிகழ்கலைகள், கைவினைக் கலைகள், பழமரபுகள், கிராமத்துக் கடவுள்கள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவையனைத்தும் இதில் உள்ளன. ஆனால் எந்தவொரு இடத்திலும் 'நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்' அல்லது 'ஒரு முக்கியமான கருத்துருவாக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்' என்கிற தொனியோடு தருமராஜ் நம்மை அணுகுவதில்லை.'நான் ஒருமுறை பாவைக்கூத்தொன்றைக் கண்டபோது என்ன நடந்தது தெரியுமா? ', 'எனக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?', 'நான் அனுமானிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா?' என்று போகிறபோக்கில் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். அந்த உரையாடலில் நாம் பங்கேற்கும்போது அவர் பார்த்த காட்சிகளை நாம் காண்கிறோம், அவர் படித்ததை நாம் படிக்கிறோம், அவர் வந்தடையும் முடிவுகளை நாம் அசைபோடுகிறோம். எல்லாமே மிக இயல்பாக நிகழ்கின்றன. அவர் எதையும் விளக்குவதில்லை. எதை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்சென்று அதன்முன்பு நிறுத்தி, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தீண்டி உணர்ந்துகொள்ளுங்கள் என்கிறார்.'நான் ஏன் தலித்தும் அல்ல?', அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் டி. தருமராஜின் முக்கியமான படைப்பு இது.