சக்கரம்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸாம்ஜி
பதிப்பகம் :சக்கரம் பதிப்பகம்
Publisher :Sakkaram Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789354192708
Add to Cartவாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பதுதானே! விடுமுறைக்கு அமெரிக்காவிலிருந்து வந்த புதைபொருள் ஆராய்ச்சியாளன் ராகவன் ஒரு மதத் தலைவரைச் சந்திக்கின்றான். அவர் இவனிடம் நம் நாட்டைக் காக்க ஒரு பொருளைத் தேடச்சொல்கிறார் . விருப்பில்லாமல் ஒப்புக்கொள்கிறார் ராகவன். அது தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்தபொழுது அந்தப் பணியை விட்டு விட்டுச் செல்ல முயிற்சிக்கிறான் .ஆனால் சிலந்தி வலை என அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவனைப்போகவிடாமல் தடுக்கின்றன. யாரை நம்புவது என்று அவன் நிலை தடுமாறும்போது எதிர்பாராமல் ஒரு பெண் போலிஸ் அதகாரியின் தொடர்பு கிடைக்கிறது. ஆனால் அதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அப்போது அவன் நண்பன் ஒருவன் உதவிக்கரம் நீட்டுகிறான். அவன் தேடப் போகும் பொருளால் , ரசாயன ஆயுதம் உள்ள எதிரியை எப்படித்தடுத்து நிறுத்த முடியும்? எதிரியின் திட்டங்கள் என்ன ? இந்த விறுவிறுப்பான நாவலைப் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.