book

ருத்ராட்சம், வலம்புரிச் சங்கு உலகம் அறியாத உண்மைகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.டி. பாண்டியராஜன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :2
Published on :2019
Out of Stock
Add to Alert List

தங்கத்தினாலோ வெள்ளியினாலோ சங்கிற்கு சிறு கவசம் செய்து அதை பாலாபிசேகம் செய்து அதையே அட்சய திதி தினத்தில் வீட்டிக்குக் கொண்டு வர வேண்டும். அதுதான் வீட்டிலேயே தங்கியிருக்கும் தன லட்சுமி வாசம் என்பது,
மகாலெட்சுமியின் பேரருளைப் பெற்றிருப்பதாக நம்புவதால் இவற்றை பலரும் வீடுகளில் வாஸ்து பார்த்து வைக்கிறார்கள்.ஆயிரம் சிப்பிகளுக்கு நடுவில் ஒரு மட்டியும், ஆயிரம் மட்டிகளுக்கிடையில்,ஒரு இடம்புரிச் சங்கும், ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு வலம்புரிச் சங்கும் பிறக்கின்றன,
இதனால்தான் மனிதவாழ்விலும் முப்பெரும் பங்கு சங்கிற்குஉண்டு
இதிலும் வலம்புரிச் சந்கேன்றால் அதன் மகத்துவத்தைப் பாருங்கள்!
  பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும். ‘சங்கநாதம்’ பிரணவ நாதத்தைப் பிரதி பலிப்பதாகும்.  அதன் சப்த அலைகளால் சுற்றுச் சூழலில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகியோடக்கூடிய தன்மையைப் பெற்றதாகும். தீய சூழ்நிலைகளை உண்டாக்கும் எதிர்மறை சக்திகள் வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் தமது சக்திகளை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அதிலிருந்து ஓம்கார ஸ்வரூப நாதம் தன்னியல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.