வள்ளலார் காட்டிய ஒளி நெறி
₹57+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம் :சிவகாமி புக் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sivagami Book Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
அகம்,
அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கட - பிரகாசமுள்ளது.
அதனில் காரியத் தாலுள்ள விபரம் பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது
உண்மையை அறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின்
பிரயோ ஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு
வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங் களையும் விசாரித்தறிதல் காரணமாகிய மன
அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள். ஒரு பொருளினது
நாம ரூப குண குற்றங்களை விசாரி யாமல் அந்தப் பொருளைக் காணுதல்
இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக் காட்சி, ஜீவக் காட்சி
ஆன்மக் காட்சியுமுண்டு. இதுபோல் அண்டத்தில் அகம், அக்கினி? அண்டத்தில்
அகப்புறம சூரியன் அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம்
நஷத்திரங்கள்; அது போலவே பிண்டத்தில் நாலிடம்; அண்டத்தில் நாலிடம்-ஆக
எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்திலுள்ளது. காரணத்தாலுள்ள இடம்: