book

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387484504
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள்.அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாகிறான். அவன் நூலகத்தின் அடியிலுள்ள ரகசிய நூலகம் ஒன்றினைப் பற்றிக் கூறி அதனுள் அழைத்துப் போகிறான். அந்த ரகசிய நூலகம் விசித்திரமானது.உலகில் எங்கே புத்தகம் தூக்கி எறியப்பட்டாலும் அது இங்கே வந்து சேகரமாகிவிடும். அது போலவே பழைய புத்தகங்களைப் பாதுகாக்கும் அவசர சிகிட்சைப் பிரிவும் அங்குண்டு.அந்த நூலகத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு மாயஉலகம் போன்றிருக்கிறது. ஆடு, முயல், ஆமை. என அங்கே புத்தகம் படிக்கும் விலங்குகள் ஏன் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்கு விசித்திரமான காரணங்களைக் கூறுகிறார்கள்.மாய நூலகத்தினை நடத்திவரும் சாக்ரடீஸைச் சந்தித்துப் பேசுகிறான் நந்து. முடிவில் அவனுக்கு ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அது என்ன பரிசு, அதைக் கொண்டு என்ன செய்தான் என நீள்கிறது சிறார்களுக்கான இந்த நாவல்.புத்தகம் படிப்பதில் சிறுவர்களுக்கு விருப்பம் உண்டாக வேண்டும் என்பதை ஒரு சுவாரஸ்யமான கதையாக விவரிப்பதே இந்நாவலின் தனித்துவம்.