book

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரமென்ஹீர், ஆ.சுந்தரம்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190425404
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த திரமென்ஹீர் நிலவுடைமைக்கும் சுகவாழ்க்கைக்கும் தலித்துகளுக்கு உரிமை உண்டு என்று பகிரங்கமாக அறிவித்தார். தலித்துகளுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்த முதல் பிரிட்டிஷ் அதிகாரி அவரே. நிலவுடமையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். தலித்துகள் விவசாயம் செய்வதற்கு நிலத்தைத் தரவேண்டும் என்று அவர் கூறியதை அரசாங்கம் கேட்கவில்லை. ஆனால், அத்தகைய சீர்திருத்தங்கள் நிறைவேறாமல் தடுத்த ஆதிக்கசாதிக் குழுக்களை அவருடைய எழுத்துக்கள் அம்பலப்படுத்தின. இந்தப் பிரச்சனைகள் எழுப்பப்பட்டதே பிரிட்டிஷார் ஆட்சியில் அதற்குரிய போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதை எடுத்துக்காட்டுகின்றன. திரமென்ஹீருடைய அறிக்கை அரசாங்கக் கொள்கை வரலாற்றைக் காட்டிலும் தலித்துகளின் எழுச்சியில் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.